என் அன்பே.....!
என் அன்பே.....!
உன்னை என் இதயத்தில் வைத்து நான் பூஜிப்பது
உனக்கு தெரியாது என் அன்பே.....!
அன்பென்னும் சொல்லால் தினம் தினம்
உன் பிரிவால் வாடும் இந்த பெண் நிலாவின்
சோகம் உனக்கு புரியாது என் அன்பே.....!
இது வார்த்தைக்காக நான் சொல்லும் வார்த்தை
அல்ல என் அன்பே...!
என் காதலில் என் உணர்வில் இருந்து வரும்
கண்ணீரில் எழுதும் கவிதை இது என் அன்பே.....!
வருடங்கள் உருண்டோடினாலும்
நாட்கள் நகர்ந்தாலும் உன் நினைவுகள்
என்றும் ஓயாது என் அன்பே .....!
உன்னை என் இதயத்தில் சுமக்கிறேனடா
இன்னும் பல ஜென்மம் கேட்கிறேனடா
இறைவனிடம் உன்னை என் காதலனாக சுமக்க

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக