செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

பெண்ணே.


பெண்ணே நின்று நிதானித்தால்
நீ ஒரு நூலகம் ...
தென்றலின் வேலை நிறுத்தத்தில்
உன் கூந்தல் தெளிந்த நல் அருவி
அந்தி மலர் மேடைதனில்
ஆடி வரும் மேகம் என நீ வந்தாய்
ஆனால் என் மனமோ கலைந்து விட்டது.

நெஞ்சில் கனவில் நினைவில் மேடையிட்டு
என் இதயத்தில் இடம் பிடித்தவளே
மொட்டாக உன் இதழ் இமைகள்
மூடிக்கொண்டு இருக்கும்
உன் மணிச்சர விழிகள்
என் மேல் மலர்ந்தால் போதும்
வேறன்ன வேண்டும் எனக்கு இவ் வையகத்தே


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக